Site icon Sangathy News

பெய்ரூட்டை அண்மித்த பகுதிகளில் 12க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல்..!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டை அண்மித்த பகுதிகளில் நேற்றைய தினம் 12க்கும் மேற்பட்ட தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய இராணுவம் குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு எச்சரிக்கைகளை வழங்கிய சில நிமிடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சேதம் மற்றும் உயிரிழப்புகள் இன்னும் மதிப்பிடப்பட்டு வருகின்றன.

இந்த தாக்குதலில் ஒரு தொடர் மாடிக் கட்டடம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹெஸ்புல்லாவின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் தாஹியில் உள்ள அதன் உளவுத்துறை தலைமையகத்தின் கட்டளை மையம் என்பவற்றைக் குறிவைத்ததாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

 

Exit mobile version