Site icon Sangathy News

இலங்கையிலுள்ள இஸ்ரேலியர்களுக்கு அந்த நாட்டு பாதுகாப்புச் சபை விடுத்த அறிவித்தல்..!

இலங்கையின் அறுகம்பை மற்றும் தென் மற்றும் மேல் கடற்கரைப் பகுதிகளிலிருந்து இஸ்ரேலிய நாட்டவர்களை உடனடியாக வெளியேறுமாறும், அங்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவும் இஸ்ரேலியர்களுக்கு அந்த நாட்டு பாதுகாப்புச் சபை அறிவுறுத்தியுள்ளது.

இந்த பகுதிகளில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள், இலங்கையிலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் அல்லது குறைந்தபட்சம் கொழும்புக்கு நகருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அதன் அடிப்படையிலேயே இஸ்ரேலின் பாதுகாப்புச் சபை இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அறுகம்பையில் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்பதால் அங்குள்ள தங்களது பிரஜைகளை வெளியேறுமாறு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளும் அவ்வாறான எச்சரிக்கையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version