Site icon Sangathy News

ஓய்வுக்காக வெளிநாடு செல்லும் ரணில்!: சந்திப்பின் போது கருத்து

இலங்கையில் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் தான் ஓய்வு எடுப்பதற்காக வெளிநாடு செல்லவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வேறொரு பதவிக்காக வெளிநாடு செல்கிறார்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு இல்லை என பதிலளித்த அவர், ஓய்வு எடுப்பதற்காக வெளிநாடு செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பல விரிவுரைகளுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு ஆர்கெட் வளாகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Exit mobile version