Site icon Sangathy News

அநுரவின் அமைச்சரவை: நாளை நியமனம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை 18ஆம் திகதி நியமிக்கப்பட உள்ளது.

அமைச்சரவை 25 பேருக்குள் மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

25 பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இராஜாங்க அமைச்சர்களோ அல்லது அமைச்சரவை அல்லாத அமைச்சர்களோ நியமிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரியவருகிறது.

தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்புகள் வழங்கப்பட இருப்பதாகவும், அதிகமான பெண்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட இருப்பதாகவும் தெரியவருகிறது.

Exit mobile version