Site icon Sangathy News

நயன்தாரா வெளியிட்ட அடுத்த அறிக்கை! இந்த முறை விடுபட்ட தனுஷ் பெயர்

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமண வீடியோவை நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆவணப்படமாக ரிலீஸ் செய்து இருக்கின்றனர்.

அதில் நானும் ரௌடி தான் பட காட்சிகள் மற்றும் பாடல்களை பயன்படுத்த அனுமதி கேட்டு நயன்தாரா தரப்பு நடிகர் தனுஷை அணுகிய நிலையில், இரண்டு வருடமாக அவர் அதை தராமல் மறுத்து வந்திருக்கிறார். அதை குறிப்பிட்டு நயன்தாரா வெளியிட்ட கடிதம் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நயன்தாராவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் இணையத்தில் இரண்டு விதமான கருத்துகள் இதற்கு வந்தது.

தற்போது Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப்படம் வெளியாகிவிட்ட நிலையில் நயன்தாரா அது பற்றி புது அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இதில் தான் கேட்ட உடன் மறுபேச்சு இல்லாமல் உடனே NOC சான்றிதழ் கொடுத்த தயாரிப்பாளர்கள் பெயர்களை குறிப்பிட்டு நன்றி கூறி இருக்கிறார்.

ஷாருக் கான் தொடங்கி தமிழில் அவர் நடித்த படங்களில் தயாரிப்பாளர்கள் பலரது பெயரை குறிப்பிட்டு நன்றி கூறி இருக்கிறார் அவர். தனுஷ் பெயரை அவர் அதில் குறிப்பிடவில்லை.

Exit mobile version