Site icon Sangathy News

IPL 2025 ஏலம்: CSK அணிக்கு மீண்டும் திரும்பும் சுட்டிக்குழந்தை சாம் கர்ரன்

2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சாம் கர்ரன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2025 தொடருக்கான இரண்டாம் நாள் ஏலம் நடைபெற்று வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை, சுட்டிக்குழந்தை என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட சாம் கர்ரனை மீண்டும் அணிக்கு எடுத்துள்ளது. அவர் ரூ.2.4 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாம் கர்ரன் திரும்பியுள்ளது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

சென்னை அணியில் விளையாடிய துஷார் தேஷ்பாண்டே ராஜஸ்தான் அணியால் ரூ.6.5 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

எனினும் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சௌத்ரி 30 லட்சத்திற்கு CSK அணியால் எடுக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version