Site icon Sangathy News

பிரபல தென்கொரிய நடிகர் மரணம்!

தென்கொரிய நாட்டை சேர்ந்த இளம் நடிகர் பார்க் மின் ஜே (32) காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவில் சுற்றுப்பயணம் செய்து வந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை அவருடைய பிக் டைட்டில் என்ற நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

இதுபற்றி அதன் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட செய்தியில், நடிப்பை விரும்பிய அழகான ஒரு நடிகர் மற்றும் எப்போதும் சிறந்த முறையில் செயல்பட்ட பார்க் மின் ஜே சொர்க்கத்துக்கு சென்றிருக்கிறார் என தெரிவித்துள்ளது.

இவர் மிஸ்டர் லீ (2021), லிட்டில் உமன் (2022), ஸ்னாப் அண்டு ஸ்பார்க் (2023 முதல் 2024 வரை) மற்றும் கொரியா-கீத்தன் வார் (2023 முதல் 2024 வரை) போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

Exit mobile version