Site icon Sangathy News

புஷ்பா 2 – 922 கோடி வசூலித்து சாதனை!

இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘புஷ்பா 2 தி ரூல்’.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் திகதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.

‘புஷ்பா 2’ முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், இதுவரை இந்தியன் சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகம் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் 5 நாள் வசூல் விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

படம் வெளியாகி 5 நாட்களில் 922 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

நாளை இத்திரைப்படத்தின் வசூல் 1000 கோடி ரூபாயை தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Exit mobile version