Site icon Sangathy News

நரைமுடியை கருப்பாக்க உதவும் இயற்கை Hairpack : வீட்டிலேயே தயாரிப்பதுஎப்படி..?

ஆண், பெண் என இருவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.

அந்தவகையில், இயற்கை முறையில் நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் Hairpack குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
மருதாணி- 2 கைப்பிடி
எலுமிச்சை- 1
தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
நெல்லிமுள்ளி பொடி- 2 ஸ்பூன்
தயிர்- 1 கப்

பயன்படுத்தும் முறை :

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்து வைத்த மருதாணி இலையை நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, தேங்காய் எண்ணெய், நெல்லி முல்லி பொடி மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடிபோட்டு அப்படியே வைத்துவிட வேண்டும்.

பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் நன்கு தேய்த்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.

இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர நரைமுடி மறைந்து கூந்தல் கருப்பாக மாறும்.

 

Exit mobile version