Site icon Sangathy News

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 46,934 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.

இதன்படி, மேல் மாகாணத்தில் 20,218 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 11,857 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version