Site icon Sangathy News

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.5.4 கோடி இழப்பு

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.

பாதியில் ஆட்டம் இரத்து செய்யப்பட்டது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விதிப்படி டெஸ்ட் போட்டியின் தினத்தில் குறைந்தபட்சம் 15 ஓவர்கள் வீசப்படா விட்டால் டிக்கெட் கட்டணத்தை 100 சதவீதம் திருப்பி வழங்க வேண்டும்.

இதன்படி 30,145 இரசிகர்களுக்கும் டிக்கெட்டின் முழுத் தொகை திரும்ப வழங்கப்படும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த வகையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரூ.5.4 கோடியை திரும்ப வழங்க உள்ளது.

10 பந்துகள் குறைவாக வீசப்பட்டதால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.5.4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version