Site icon Sangathy News

படகு விபத்தில் 25 பேர் பலி!

கொங்கோவின் மைடொபி மாகாணத்திலுள்ள பெமி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை சுமார் 25 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகில் 100ற்கும் மேற்பட்டோர் பயணித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version