Site icon Sangathy News

மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய ஜோ ரூட்!

டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது.

இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 895 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்டதால், சக வீரரான ஹாரி புரூக்கை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.

ஹாரி புரூக் 876 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.

நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 867 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார் .

ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 5வது இடத்தில் உள்ளார்.

இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் 6வது இடத்திலும் உள்ளார்.

இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் 4வது இடத்திலும் , ரிஷப் பண்ட் 9-வது இடத்திலும் , சுப்மன் கில் 16-வது இடத்திலும், விராட் கோலி 20வது இடத்திலும், ரோகித் சர்மா 30-வது வது இடத்திலும் உள்ளனர்.

 

Exit mobile version