Site icon Sangathy News

நேபாளத்தில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

நேபாளத்தில் இன்று அதிகாலை 3.59 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

கடந்த 2015-ல் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர் அதிர்வுகளால் சுமார் 9,000 பேர் உயிரிழந்தனர்.

அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் 11-வது நாடாக நேபாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version