Site icon Sangathy News

தென் கொரிய விமான விபத்தில் 85 பேர் பலி!

தென் கொரியாவிலுள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் பெங்கொக் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி, தென்கொரிய – முவான் சர்வதேச விமான நிலையத்தின் சுவரில் மோதுண்டுள்ளது.

விபத்துக்குள்ளான போது, குறித்த விமானத்தில் 175 பயணிகளும், 6 பணிக்குழாமினரும் இருந்ததாக தென்கொரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் சிக்கியர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன.

Exit mobile version