Site icon Sangathy News

கொலம்பியாவில் பஸ் விபத்து – 13 பேர் பலி..!

கொலம்பியா நாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள நெடுஞ்சாலையில் 30க்கும் அதிகமானோர் பயணித்த சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த பஸ் வளைவில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 13 பேர் பரிதாபமாக பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த மீட்புக்குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலம்பியா நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் 8,000 பேர் பலியாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version