Site icon Sangathy News

பயிற்சியின் போது விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர்..!

இந்தியாவில் குஜராத் மாநிலம் போர்பந்தரில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி கடலோர காவல்படையை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்ததாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

போர்பந்தரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத விதமாக ஏ.எல்.ஹெச். துருவ் ஹெலிகொப்டர் விழுந்தது நொறுங்கியது.

விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று மதியம் 12:10 மணியளவில் போர்பந்தர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கடலோர காவல்படையின் மேம்பட்ட இலகுரக ஹெலிகொப்டர் விழுந்தது (ALH) விபத்துக்குள்ளானது.

வழக்கமான பயிற்சியின் போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version