Site icon Sangathy News

விமானத்தில் பெண் பயணிக்கு தொல்லை கொடுத்த இலங்கையர்!

அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த விமானத்தில் பெண் ஒருவருக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கையர் மெல்பேர்ன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் அவுஸ்திரேலியா நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடுமையான நிபந்தனைகளுடன் பிணை

குறித்த நபர் கடந்த 18ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து கைதான இலங்கையர் மறுநாள் 19ஆம் திகதி அந்நபருக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது.

அதோடு சந்தேகநபரான இலங்கையர் தனது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைத்துள்ளதோடு, வழக்கு விசாரணை முடியும் வரை விக்டோரியாவில் தங்கியிருக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் பிணை நிபந்தனைகளின் அடிப்படையில், வாரத்துக்கு மூன்று முறை அவர் பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இதேவேளை, விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை இம்மாதம் 30ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அவுஸ்திரேலியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Exit mobile version