Site icon Sangathy News

இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (20) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (20) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபாய் 29 சதம், விற்பனைப் பெறுமதி 300 ரூபாய் 81 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 354 ரூபாய் 77 சதம், விற்பனைப் பெறுமதி 368 ரூபா 48 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 92 சதம், விற்பனைப் பெறுமதி 311 ரூபாய் 37 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபாய் 95 சதம், விற்பனைப் பெறுமதி 332 ரூபாய் 13 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 86 சதம், விற்பனைப் பெறுமதி 209 ரூபாய் 45 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179 ரூபாய் 49 சதம், விற்பனைப் பெறுமதி 188 ரூபாய் 86 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212 ரூபாய் 19 சதம், விற்பனைப் பெறுமதி 221 ரூபாய் 96 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 86 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 94 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version