Site icon Sangathy News

இந்திய அணி வெற்றி!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற குறித்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 132 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் ஜோஸ் பட்லர் 68 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில் 133 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 12.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் அபிஷேக் சர்மா 79 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இதற்கமைய 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் 1 க்கு 0 எனும் அடிப்படையில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

 

Exit mobile version