Site icon Sangathy News

உச்சம் தொட்ட கொழும்பு பங்குச்சந்தை!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (22) குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 231.64 புள்ளிகளால் அதிகரித்துள்ளது.

அத்துடன் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 16,828.80 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

இது பங்கு விலைச் சுட்டெண்ணில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச மதிப்பாகக் கருதப்படுகின்றது.

அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 10.66 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

Exit mobile version