Site icon Sangathy News

நோமன் அலி ஹெட்ரிக் சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நோமன் அலி படைத்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக இடம்பெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் குறித்த சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் சார்பில் வேகப்பந்து வீச்சாளர்களே அதிகபடியான ஹெட்ரிக் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இதன்படி வசிம் அக்ரம், அப்துல் ரசாக், மொஹமட் ஷமி மற்றும் நசீம் ஷா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களே ஹெட்ரிக் சாதனையை நிகழ்த்தியிருந்தனர்.

இந்தநிலையில் பாகிஸ்தான் அணியின் சார்பில் டெஸ்ட் போட்டிகளில் ஹெட்ரிக் சாதனை நிகழ்த்திய முதல் முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை நோமன் அலி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version