Site icon Sangathy News

விடுவிக்கப்படவுள்ள பணயக் கைதிகளின் பெயர்கள் அறிவிப்பு!

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் இன்றைய தினம் விடுவிக்கப்படவுள்ள நான்கு பணயக் கைதிகளின் பெயர்கள் ஹமாஸ் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, நான்கு பெண்கள் இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஈடாக இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 180 பாலஸ்தீன கைதிகள் இன்று விடுவிக்கப்படுவார்கள்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ள போர் நிறுத்தத்தின் கீழ் இன்றைய தினம் இரண்டாவது முறையாக கைதிகள் பரிமாற்றம் இடம்பெறவுள்ளது.

முதலாவது பரிமாற்றத்தின் போது 3 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டதுடன் 90 பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை, அடுத்த 5 வாரங்களில் விடுவிக்கப்படவுள்ள மீதமுள்ள 26 பணயக் கைதிகள் பற்றிய தகவல்களையும் ஹமாஸ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Exit mobile version