Site icon Sangathy News

விடாமுயற்சி படத்தின் பத்திகிச்சு பாடலின் ரேசிங் வெர்ஷன் வீடியோ வெளியீடு

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “விடாமுயற்சி.”

இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஆக்ஷன் காட்சிகள், படத்தின் ஒளிப்பதிவு, டிரெய்லரின் தரத்தை உயர்த்தியுள்ளது.

படத்தின் முதல் பாடலான சவதீகா பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்தப் படத்தின் அடுத்த பாடல் (பத்திக்கிச்சு) பாடல் வெளியானது.

இப்பாடலை விஷ்ணு எடாவன் வரிகளில் அனிருத் மற்றும் யோகி சேகர் இணைந்து பாடியுள்ளனர்.

திரைப்படம் வெளியாக இன்னும் 9 நாட்கள் மட்டுமே இருப்பதால் தற்பொழுது படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக சென்றுக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் பத்திகிச்சு பாடலை அஜித் குமார் ரேசிங் காணொளியுடன் ஒரு வீடியோவை இன்று மாலை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

Exit mobile version