Site icon Sangathy News

விராட் கோலியை காண மைதானத்தில் குவிந்த ரசிகர்கள்

விராட் கோலி 12 ஆண்டுக்குப் பிறகு ரஞ்சி டிராபி தொடரில் விளையாடுகிறார்.

டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார்.

இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி பங்கேற்கும் போட்டி என்பதால் டெல்லி-ரெயில்வேஸ் அணிகள் மோதும் போட்டி நேரலையில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று தொடங்கியது.

இந்நிலையில், டெல்லி அணிக்காக விளையாடும் விராட் கோலியைக் காண காலையில் இருந்தே ரசிகர்கள் திரண்டனர்.

விராட் கோலி ஆடும் இந்தப் போட்டியை ஜியோ சினிமா ஒளிபரப்புகிறது.

விராட் கோலிக்கு கூடும் ரசிகர்களின் எண்ணிக்கையால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்து இருக்கிறது.

விராட் கோலி பயிற்சி செய்யும்போதே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அருண் ஜெட்லி மைதானத்தில் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version