Site icon Sangathy News

14 இந்திய மீனவர்கள் கைது

மன்னாருக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 14 பேரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாகக் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் அவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version