Site icon Sangathy News

புதிய டெஸ்லா கார் வாங்கிய ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் புதிய வகை சிவப்பு நிற S டெஸ்லா கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

ஈலோன் மஸ்க்குடன் சேர்ந்து அந்த காரில் ட்ரம்ப் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த காரை 76,880 அமெரிக்க டொலரிற்கு வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டெஸ்லா நிறுவன கார்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷங்கள் அமெரிக்காவில் எழுந்துள்ளன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ட்ரம்ப், டெஸ்லாவுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகள், அவர்கள் தங்கள் கையில் சிக்கும்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version