Site icon Sangathy News

நியூசிலாந்து அணி அபார வெற்றி!

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 91 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இந்தநிலையில் 92 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 10.1 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

இதன்படி 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் 1-0 எனும் அடிப்படையில் நியூசிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

Exit mobile version