Site icon Sangathy News

‘குட் பேட் அக்லி’திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’.

இந்தப் திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

‘குட் பேட் அக்லி’ திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வெளியாகவுள்ளது.

குறித்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.

இந்தநிலையில் இப்படத்தின் முதல் பாடல் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.

இந்த பாடலுக்கு OG Sambavam எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த பாடலை ஜி.வி பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

பாடலின் வரிகளை விஷ்ணு எடாவன் எழுதியுள்ளார்.

 

Exit mobile version