Site icon Sangathy News

வடக்கு கடற்பரப்பில் 11 இந்திய மீனவர்கள் கைது…!

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயணித்த படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுவதுடன், அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

 

Exit mobile version