Site icon Sangathy News

பிற்பகல் 2 மணிக்கு பின்னர் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டின் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அந்தவகையில், மேல், சப்ரகமுவ, தென், ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேலும், தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும்.

Exit mobile version