Site icon Sangathy News

அசத்தல் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 13 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லக்னோவில் நடைபெற்ற குறித்த போட்டியில் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் நிக்கோலஸ் பூரன் 44 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இந்தநிலையில் 172 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 16.2 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

Exit mobile version