Site icon Sangathy News

அமெரிக்காவில் வெடித்த பாரிய போராட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் கோடீஸ்வர வர்த்தகரான எலான் மஸ்க்கிற்கும் எதிராக அமெரிக்காவில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த 2-ம் திகதி இலங்கை உள்பட பல்வேறு நாடுகள் மீது மேலதிக வரிகளை விதித்தார்.

அமெரிக்கா மீது ஏனைய நாடுகள் அதிக வரிகளை விதிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகெங்கிலும் பங்குச் சந்தையும் டிரம்ப் அறிவிப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இருவருக்கும் எதிராக அமெரிக்கா முழுவதும் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஹேன்ட்ஸ் ஓப் (Hands off) என்ற எதிர்ப்பு பேரணி அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பேரணியில் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களும், உள்ளூர் ஆதரவாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்காவில் இடம்பெற்ற மிகப் பெரிய பேராட்டங்களில் இதுவும் ஒன்று. இது அமெரிக்கர்களிடையே அதிகரித்து வரும் விரக்தியைக் குறிக்கிறது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version