Site icon Sangathy News

ஈஸ்டருக்காக 23 மில்லியன் சாக்லேட் முயல்கள் உற்பத்தி: ஸ்விட்சர்லாந்தில் விலை உயர்வு எதிரொலி! | 23 Million Swiss Chocolate Bunnies Made Price Hike

ஈஸ்டர் பண்டிகைக்காக ஸ்விட்சர்லாந்தில் சுமார் 23 மில்லியன் சாக்லேட்கள் தயாரிக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 23 மில்லியன் சாக்லேட் முயல்கள்
ஸ்விட்சர்லாந்தில் இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சுமார் 23 மில்லியன் சாக்லேட் முயல்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக சோகோசுயிஸ் (Chocosuisse) தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஈஸ்டர் விற்பனையில், நிரப்பப்பட்ட சாக்லேட் முயல் பொம்மைகள் மற்றும் சாக்லேட் முட்டைகள் மீண்டும் அதிக விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், சாக்லேட் விலை உயர்வு காரணமாக இந்த பாரம்பரிய ஈஸ்டர் இனிப்புகள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது.

சாக்லேட் உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பான சோகோசுயிஸ், மூலப்பொருட்களின் விலை அதிகரித்ததன் விளைவாக பல சாக்லேட் நிறுவனங்கள் தங்கள் சாக்லேட் பொருட்களின் விலைகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கீஸ்டோன்-எஸ்டிஏ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

சந்தையில் உள்ள பல்வேறு வகையான ஈஸ்டர் சாக்லேட் பொருட்களைக் கருத்தில் கொண்டு சராசரி விலை உயர்வை குறிப்பிடுவது கடினம் என்று சோகோசுயிஸ் தெரிவித்துள்ளது.

இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளில் கொக்கோ பீன்ஸ் விலை நான்கு மடங்குக்கும் மேலாக உயர்ந்துள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், சாக்லேட் தயாரிப்பாளர்கள் தங்கள் லாப வரம்பில் அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர், இதன் விளைவாக சில்லறை விற்பனையில் விலை உயர்வுகள்

Exit mobile version