Site icon Sangathy News

குட் பேட் அக்லி படம் உலகளவில் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி கடந்த 10ம் தேதி வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர். தமிழில் இவர்கள் தயாரிக்கும் முதல் படம் இதுவே ஆகும். இப்படம் அவர்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது.

ஆம், 11 நாட்களில் உலகளவில் இப்படம் லாபத்தை எட்டியுள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர். அஜித்தின் கரியர் பெஸ்ட் திரைப்படமாக குட் பேட் அக்லி அமைந்துள்ளது என்றும் திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இதுவரை உலகளவில் இப்படம் செய்திருக்கும் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குட் பேட் அக்லி படம் இதுவரை உலகளவில் ரூ. 246 கோடி வசூல் செய்துள்ளது.

Exit mobile version