Site icon Sangathy News

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயக்கம் காட்டும் உக்ரைன் – விரக்தியில் டிரம்ப்

ரஷ்யா – உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பான நடவடிக்கைகளில் வேகம் குறைவாக இருப்பதாகவும், அந்த விஷயத்தில் அதிபர் டிரம்ப் மிகவும் விரக்தி அடைந்துள்ளதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.

அமைதிப் பேச்சுவார்த்தை விவகாரத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தவறான திசையில் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் அதிபர் டிரம்ப்பின் பொறுமை குறைந்து வருவதாகத் தெரிவித்த அவர், அமைதியை ஏற்படுத்த டிரம்ப் விரும்பும் நிலையில், இரு நாடுகளும் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் கரோலின் லீவிட் தெரிவித்தார்.

Exit mobile version