Site icon Sangathy News

நாடு முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு

இந்த ஆண்டு விசாக பூரணை தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை பதிவு செய்யப்பட்ட தன்சல்களின் எண்ணிக்கை 8,581 என்று அதன் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்தார்.

குறித்த தன்சல்கள் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், விசாக பூரணை தினத்திலும் மறுதினமும் அவை சோதனை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு விசாக பூரணை காலப்பகுதியில் உணவு மற்றும் நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்ததால், இந்த ஆண்டு தன்சல்களை சுகாதார முறையில் நடத்துமாறு சுகாதாரத் துறையை சார்ந்தவர்களால் கோரப்பட்டுள்ளது.

Exit mobile version