Site icon Sangathy News

தமிழ் தேசிய உணர்வைக் கொண்டவர்கள் ஆட்சியமைக்க தமிழரசுக் கட்சியுடன் இணைய வேண்டும் : ஞானமுத்து ஸ்ரீநேசன்

தமிழ்த் தேசிய உணர்வைக் கொண்டவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு, இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், பரஸ்பர ஒத்துழைப்பை ஏற்படுத்தும் நோக்கில் ஏனைய கட்சிகளுடனும் இணைந்து செயற்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version