Site icon Sangathy News

பூமிக்கு வந்த அதிசய விண்கல்

அவுஸ்திரேலிய வான்பரப்பில் தெரிந்த பச்சைநிறத்திலான அசையும் தோற்றம் கொண்ட வித்தியாசமான ஒளிவடிவம் சிறியரக நகரும் விண்கல் என அடையாளம் காணப்பட்டுள்ளது

மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள வானியல் நிபுணர்கள், மாநிலத்தின் மீது வானத்தை ஒளிரச் செய்த ஒரு பிரகாசமான ஒளியை கண்டுள்ளனர்

பச்சை மற்றும் செம்மஞ்சள் நிறத்தில் தெரிந்த அந்த ஒளிவடிவம் வானிலிருந்து நகர்ந்து செல்லும் காட்சிகள் சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் வானத்தில் ஒரு பிரகாசமான ஒளி பரவியதைக் கண்டதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் பெர்த் ஆய்வகத்தைச் சேர்ந்த மேத்யூ வூட்ஸ் 9 நியூஸிடம் கூறுகையில், இந்த தீப்பந்து “ஒரு நரக விண்கல்”, இது கிரிக்கெட் பந்து முதல் கூடைப்பந்து வரை அளவு கொண்டது என கூறுகின்றனர்

அன்னையர் தினத்தன்று கிடைத்த நல்ல சிறிய ஆச்சரியம்” என்று இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு
வருகின்றது

இதேவேளை இந்த விண்கல் இரும்பினால் ஆனது என்றும், அது வளிமண்டலத்தில் நுழையும் போது தீப்பிடித்ததாகவும் கூறப்படுகின்றது.

விண்கல்லின் ஏதேனும் எச்சங்கள் பூமிக்கு வெளியே வந்ததா என்பதைக் கண்டறிய நிபுணர்கள் தற்போது முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது

Exit mobile version