Site icon Sangathy News

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கை நிராகரிப்பு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று தொடர்பாக, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிணையை ரத்து செய்து, அவரை தடுப்புக் காவலில் வைக்குமாறு ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (16) நிராகரித்தார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த வாதங்களில், சந்தேக நபரின் பிணையை ரத்து செய்யும் அளவுக்கு போதுமான ஆதாரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை எனக் கூறி, இந்தக் கோரிக்கையை நீதவான் நிராகரித்தார்.

 

Exit mobile version