Site icon Sangathy News

காஸா மீதான இஸ்ரேலின் வான் வழித் தாக்குதல் : 72 பேர் பலி..!

காஸா மீது இன்று அதிகாலை இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதல்களில் சுமார் 72 பேர் கொல்லப்பட்டதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காஸா போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், இஸ்ரேல் முற்றுகையிட்டுள்ள காஸா பகுதிகளிலுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும், அரபு நாடுகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

Exit mobile version