Site icon Sangathy News

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை…!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (18) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாகவும், அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேல், வடமத்திய, தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version