Site icon Sangathy News

மழையுடனான வானிலை – சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த மண்சரிவு எச்சரிக்கையானது, இன்று (16) காலை 10 மணி முதல் எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version