Site icon Sangathy News

சுகர் பேபி பாடலை வெளியிட்ட தக் லைஃப் படக்குழு

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

இந்நிலையில், தக் லைஃப்’ திரைப்படத்தின் சுகர் பேபி பாடலை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் இந்த பாடல் வெளியாகி உள்ளது.

 

Exit mobile version