Site icon Sangathy News

பாகிஸ்தான் பாடாசாலை பேருந்து மீது தாக்குதல்; நால்வர் பலி 38 பேர் காயம்

பாக்கிஸ்தானின் பலோச்சிஸ்தானில் பாடாசாலை பேருந்தினை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நான்கு பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்திலேயே உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. குஸ்டார் மாவட்டத்தில் பாடசாலை பேருந்து ஜீரோபொயின்ட் என்ற பகுதியில் தாக்குதலிற்குள்ளாகியுள்ளது.

கொல்லப்பட்டவர்களின் உடல்களையும் காயமடைந்தவர்களையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர் காயமடைந்தவர்களை குவட்டா கராச்சிக்கு கொண்டு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version