Site icon Sangathy News

மருத்துவ தொழில் வல்லுநர்களின் ஒன்றியத்தின் நாளைய போராட்டம் கைவிடப்பட்டது

பல கோரிக்கைகளை முன்வைத்து, நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்களின் ஒன்றியம் நாளை (22) ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த நாடளாவிய ரீதியிலான அடையாள வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்களின் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் பதில் சுகாதார செயலாளருடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதன்படி, நாளை (22) சேவைகள் வழமைபோல இடம்பெறும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக தங்கள் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட எதிர்பார்த்து காத்திருந்த போதிலும், அதற்கான சந்தர்ப்பத்தை சுகாதார அமைச்சு வழங்காத காரணத்தினால் இந்த போராட்டத்திற்கு தயாரானதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Exit mobile version