Site icon Sangathy News

இலங்கையில் DIM0 Agritech இன் புதிய தொழில்நுட்பத் தீர்வுகள் அறிமுகம்…!

கடந்த தசாப்தத்தில் எமது நாட்டில் கணிசமான அளவில் பாதுகாப்பான விவசாய பசுமை இல்லங்கள் நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் சரியான தொழில்நுட்ப அறிவின்றிய கட்டுமானங்கள் மற்றும் தவறான பராமரிப்பு நடைமுறைகளால் எதிர்பார்த்த இலக்குகளை இலங்கையால் பெறமுடியாமல் போயுள்ளது.

இதை உணர்ந்த DIMO நிறுவனத்தின் DIMO Agribusinesses ஆனது, தனது DIMO Agritech பிரிவின் மூலம் தெளிவான வழிகாட்டலுடன் நவீன பாதுகாப்பான விவசாய வீடுகள் மற்றும் பொலி டன்னல் (பாதுகாப்பான விவசாய இல்ல) மாதிரிகள் போன்ற தொழில்நுட்பத் தீர்வுகளை அறிமுகம் செய்து வருகிறது. இதன் நோக்கம், பாதுகாப்பான விவசாய முறைகளின் மூலமாக விவசாய விளைச்சல் உற்பத்தித் திறனை அதிகரிப்பதாகும்.

 

Exit mobile version