Site icon Sangathy News

இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் நேற்று (22.05) மாலை 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் பெங்குலுவிலிருந்து தென்மேற்கே 38 கிமீ தொலைவில் உள்ளூர் நேரப்படி இரவு 7.52 மணிக்கு 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக GFZ தெரிவித்துள்ளது.

இந்தோனேசியா பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள நில அதிர்வு நடவடிக்கைகளின் மையமான நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை

Exit mobile version