Site icon Sangathy News

குடும்பங்களுக்கு மிகவும் சிறந்த நாடாக தெரிவாகிய இலங்கை

Sri Lanka flag waving cloudy sky background realistic 3d illustration

இலங்கை 82 சக்திவாய்ந்த நாடுகளை பிள்தள்ளி உலகின் மிகவும் குடும்ப நட்பு நாடாக உருவெடுத்துள்ளது.

24 காரணிகளைப் பயன்படுத்தி பயண இதழான Conde Nast Traveller நடத்திய கணக்கெடுப்பிற்கமைய, இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கல்வி முறைக்கு ஈர்க்கக்கூடிய மதிப்பெண்களைப் பெற்ற இலங்கை, ஆண்டுக்கு 354.60 டொலர் என்ற மிகக் குறைந்த வருடாந்திர குழந்தை பராமரிப்புச் செலவுகளைக் கொண்ட நாடாகவும் பட்டியலில் இடம்பிடித்தது.

இலங்கையின் விருந்தோம்பல், மக்களின் முகங்களில் புன்னகை, குடும்பத்திற்கு ஏற்ற ஹோட்டல்கள், பரந்த தேசிய பூங்காக்கள், பரந்த கடற்கரைகள் மற்றும் கண்கவர் வரலாறு ஆகியவற்றை இந்த இதழ் எடுத்துக்காட்டுவதால், இந்தப் பட்டியலில் இலங்கை மிக உயர்ந்த இடத்தை பிடித்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் குடும்பங்களுக்கு மிகவும் உகந்த நாடுகளின் தரவரிசை
1. இலங்கை
2. ஸ்வீடன்
3. நார்வே
4. நியூசிலாந்து
5. ஐஸ்லாந்து
6. ஜெர்மனி
7. பின்லாந்து
8. டென்மார்க்
9. ஆஸ்திரேலியா
10. அமெரிக்கா

Exit mobile version