Site icon Sangathy News

அதிகாலையில் தந்தையுடன் சென்ற பிள்ளைக்கு நேர்ந்த பரிதாபம்

கோமரங்கடவல, இதிகட்டுவெவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 7 வயது பிள்ளை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த தனது தந்தையுடன் பிரதான வீதிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

யானை சைக்கிளைத் தாக்கியபோது தந்தை தூக்கி வீசப்பட்டதாகவும், காட்டு யானை பிள்ளையை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த பிள்ளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதேவேளை, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் அம்பாறை பகுதிகளில் உள்ள கிராமங்களை காட்டு யானைகள் தாக்குவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதனால், குறித்த பகுதிகளில் உள்ள மக்களின் அன்றாட நடவடிக்கைகள் கூட பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version